ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பிறருக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ தொடரை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்பு அணி இந்திய வீரர்களுக்கு நீண்ட கால ஓய்வு விடப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. சில வீரர்களுக்கு இடையில் இடைவேளை ஏற்பட்டாலும், போட்டிகளில் எந்த இடைநிறுத்தமும் இல்லை. எனவே ஐபிஎல் 2023 சீசனைத் தொடர்ந்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின்னர் ஓய்வு எடுத்துவிட்டு ஜூலை முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படும்.
இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்க காரணம்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்த பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர், டி20 தொடர் குறித்து பேசப்பட்டது. ஆனால், தற்போது இரண்டு திட்டங்களும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ஒளிபரப்பாளர் இல்லாததே முதன்மையான காரணம். டிஸ்னி-ஸ்டார் உடனான பிசிசிஐ ஒப்பந்தம் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருடன் காலாவதியாகிவிட்டதால், தற்போது பிசிசிஐக்கு ஒளிபரப்பு பங்குதாரர் இல்லை. ஊடக உரிமைகளுக்கான புதிய டெண்டரை பிசிசிஐ வெளியிட வேண்டும் என்றாலும், அது தாமதமாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தொடருக்கு ஊடக வருமான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், தற்காலிக ஊடக உரிமைகளை பெற நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் செப்டெம்பரில் நடத்திக் கொள்ளலாம் என இரு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன.
இந்த காலவரிசையைப் பகிரவும்