
தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5வது போட்டி, தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில், ராஞ்சியில் நடந்த 4வது டெஸ்டுக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, அணியில் இணைந்துள்ளார்.
காயம் காரணமாக, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்ட கே.எல். ராகுல், இந்த டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்த போட்டி தொடரை ஏற்கனவே, 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி விட்டது. அதனால் பல மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா இணைந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : இந்திய அணி அறிவிப்பு!#INDvENG #TeamIndia #England #KLRahul #Bumrah #JayaPlus pic.twitter.com/b8TZzjKlZY
— Jaya Plus (@jayapluschannel) February 29, 2024