Loading...
ரோஹித் ஷர்மா, விராட் கோலி மீண்டும் எப்போது விளையாடுவார்கள்? இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் அட்டவணை விபரம்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மீண்டும் களமிறங்குகின்றனர்.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி மீண்டும் எப்போது விளையாடுவார்கள்? இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் அட்டவணை விபரம்

எழுதியவர் Vasuki
Nov 15, 2026
05:40 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய அணி, அடுத்ததாக ஷுப்மன் கில் தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்குச் சுமார் ஒரு மாத காலம் ஓய்வு கிடைத்துள்ளது. இதையடுத்து, வரும் டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய ஜெர்சியில் களமிறங்க உள்ளனர்.

மைதானம்

இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை 

2026-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள கடைசி ஒருநாள் தொடராக இலங்கை தொடர் அமைந்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 13-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) மைதானத்திலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 16-ஆம் தேதி பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற உள்ளன.

அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும்.

2027 ஐபிஎல் 

இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்கள்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டிசம்பர் 22 முதல் 27 வரை ராஜ்கோட், கட்டாக் மற்றும் புனே ஆகிய நகரங்களில் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

அதனைத் தொடர்ந்து 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 3 முதல் 9 வரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.

2027 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோரைக் காண ரசிகர்களுக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பாக ஜிம்பாப்வே தொடர் அமையும்.

அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி கவனம் செலுத்தவுள்ளது.

ADVERTISEMENT