Page Loader
INDvsENG 3வது டெஸ்ட்: இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்
இங்கிலாந்து வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்

INDvsENG 3வது டெஸ்ட்: இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2025
07:38 am

செய்தி முன்னோட்டம்

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலி இடையே மைதானத்தில் பதட்டமான மோதலுடன் முடிந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியாவும் மூன்றாவது நாளில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில் இரு அணிகளின் ஸ்கோரும் டை ஆன நிலையில், கடைசி நேரத்தில் ஒரு ஓவர் மட்டுமே பேட்டிங் செய்த இங்கிலாந்து கூடுதல் ஓவரை எதிர்கொள்ளாமல் இருக்க ஜாக் க்ராலி வேண்டுமென்றே கிரீஸில் நேரத்தை வீணடிப்பது போல் தோன்றியது.

ஜாக் க்ராலி

ஜாக் க்ராலியின் செயலால் அதிருப்தி

ஜாக் க்ராலி மீண்டும் மீண்டும் தனது பேட்டிங் நிலைப்பாட்டில் இருந்து விலகி, ஓவரை வீசிய ஜஸ்ப்ரீத் பும்ராவை விரக்தியடையச் செய்தார். இதனால் ஷுப்மன் கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்த, மைதானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலி தனது நேரத்தை வீணடிக்கும் தந்திரோபாயங்களைத் தொடர்ந்த பிறகும், பின்னர் கையுறைகளில் தாக்கப்பட்ட பிறகு காயம் அடைந்ததாக நடித்த பிறகும் ஷுப்மன் கில் க்ராலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இந்த பதற்றமான சூழலால் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஜூலை 13) தொடங்கும்போது போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.