Page Loader
AG2023-  பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா
சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.

AG2023-  பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா

எழுதியவர் Srinath r
Oct 04, 2023
03:32 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது நடந்து முடிந்த பெண்களுக்கான 75 கிலோ பிரிவு குத்துச்சண்டை இறுதி போட்டியில் சீனாவிடம் தங்கத்தை பறிகொடுத்தது இந்தியா. இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், சீன வீராங்கனை லீ கியான்-இடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியுற்றார். போர்கோஹைன், அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை 5-0 என்று வென்றதன் மூலம், அடுத்த வருடம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரின், ப்ரீத்தி மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோர் வரிசையில் நான்காவதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு போர்கோஹைன் தகுதி பெற்றுள்ளார்.

embed

அரை இறுதியில் பெற்ற வெற்றி மூலம் லவ்லினா போர்கோஹைன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார்

SHINING SILVER🥈 FOR LOVLINA🌟 🇮🇳's Boxer and #TOPSchemeAthlete @LovlinaBorgohai wins the SILVER 🥈medal in the Women's 75 kg category 🇮🇳🏅 Her incredible prowess in the ring shines brighter than ever. Let's give her a thunderous round of applause! 🥳💪 Congratulations,... pic.twitter.com/i0qSwfD51o— SAI Media (@Media_SAI) October 4, 2023