NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
    வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

    INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

    முன்னதாக, செப்டம்பர் 19 அன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை வங்கதேசம் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைக் குவித்தது.

    இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தனர்.

    வங்கதேச தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் முகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு சுருண்டது.

    இந்தியா ஆதிக்கம்

    இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அபார பேட்டிங்

    முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்தனர்.

    இதைத் தொடர்ந்து இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

    இதன் மூலம் இந்தியா 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீச்சைத் தொடங்கியுள்ளது.

    இதற்கு முன்னர் வங்கதேசம் கடைசி இன்னிங்ஸில் 400+ இலக்கை 20 முறை எதிர்கொண்டு 19 முறை தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு முறை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    இந்திய கிரிக்கெட் அணி
    வங்கதேச கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    டெஸ்ட் கிரிக்கெட்

    India vs England: இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அஸ்வின் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    India vs England 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்திய அணி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு

    டெஸ்ட் மேட்ச்

    Sports Round Up: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானம்; இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு இந்திய கிரிக்கெட் அணி
    இதேநாளில் அன்று : செஞ்சூரியனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நீக்கம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இந்திய கிரிக்கெட் அணி

    மகளிர் ஆசியக் கோப்பை டி20: இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது இந்தியா  இலங்கை கிரிக்கெட் அணி
    மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது இலங்கை  இலங்கை கிரிக்கெட் அணி
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார் கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன? ரோஹித் ஷர்மா

    வங்கதேச கிரிக்கெட் அணி

    Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம் ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025