
ஆர்சிபி கிடையாது இந்தியான்னு சொல்லுங்க : டெல்லி டெஸ்டில் வைரலாகும் கோலியின் செயல்!
செய்தி முன்னோட்டம்
மைதானத்தில் கோலி இருந்தாலே, அவர் ரசிகர்களுடன் சைகையில் பேசும் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அந்தவகையில் டெல்லியில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் 2வது போட்டியிலும், சுவாரஷ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இது தொடர்பாக வைரலாகும் ஒரு வீடியோவில், போட்டியின் மூன்றாவது நாளில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்த கோலி, ரசிகர்கள் தங்கள் கோஷத்தை மாற்றும்படி கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.
கோலி மைதானத்தில் இருந்ததால், "ஆர்சிபி... ஆர்சிபி" என ரசிகர்கள் கத்திக்கொண்டிருந்தனர். அதை பார்த்த கோலி, தனது ஜெர்சியை காட்டி, இந்தியா என முழக்கமிடுமாறு கூறியுள்ளார்.
அடுத்த சில நொடிகளில், அருண் ஜெட்லி மைதானத்தில் ஆர்சிபி கோஷம் மறைந்து "இந்தியா" எனும் கோஷம் வர ஆரம்பித்தது. கோஷமிட்டவர்களை உற்சாகப்படுத்திய கோலி, இன்னும் சத்தமாக கோஷமிடுமாறு கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் வீடியோ
Crowd was chanting 'RCB, RCB' - Virat Kohli told to stop it and chant 'India, India'. pic.twitter.com/kMd53wbYRU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023