
உலகக் கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து
செய்தி முன்னோட்டம்
ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்கியது.
கௌஹாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் இடையேவான இரண்டாவது ஆட்டம் மழையால் ரத்து கைவிடப்பட்டது.
மைதானத்தில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக டாஸ் போட முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தையும், ஆப்கானிஸ்தான் இலங்கையையும் எதிர்கொள்ளவிருக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்ட ஆட்டம்
🟢 MATCH UPDATE 🟡
— Proteas Men (@ProteasMenCSA) September 29, 2023
The #CWC23 warm up match between The Proteas and Afghanistan has been abandoned due to heavy rain 🇿🇦🇦🇫
📷 @ICC#WozaNawe #BePartOfIt pic.twitter.com/WxTrAHQGVe