
ODI World Cup Reserve Day : அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாள் குறித்த முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் புதன்கிழமை (நவம்பர் 15) முதல் நாக் அவுட் போட்டிகள் தொடங்க உள்ளன.
புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.
அதேபோல், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரையிறுதியில் மோத உள்ளன.
இதைத் தொடர்ந்து, இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 19 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன.
இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ODI World Cup 2023 Semifinal and Final reserve days
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் நாள்
லீக் சுற்று போட்டிகளின்போது ரிசர்வ் நாட்கள் வழங்கப்படாத நிலையில், நாக் அவுட் போட்டிகள் அனைத்திற்கும் ஐசிசி ரிசர்வ் நாட்களை ஒதுக்கியுள்ளது.
இதன்படி அரையிறுதி போட்டிகளை பொறுத்தவரை இந்தியா vs நியூசிலாந்து போட்டிக்கு நவம்பர் 16ம், தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு நவம்பர் 17ம் ரிசர்வ் நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
ரிசர்வ் நாளிலும் மழை போன்ற காரணங்களால் போட்டியை முடிக்க முடியாமல் போனால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதே நேரம் இறுதிப்போட்டிக்கு நவம்பர் 20 ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாளிலும் போட்டி விளையாட முடியாமல் போனால் கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.