Page Loader
'சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீள்வதற்கான நேரம்' : ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்!
ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்

'சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீள்வதற்கான நேரம்' : ரோஹித் ஷர்மாவின் படத்துடன் ஐசிசி வெளியிட்ட ட்வீட்!

எழுதியவர் Sekar Chinnappan
May 31, 2023
01:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7இல் லண்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், ரோஹித் ஷர்மாவின் புகைப்படத்துடன் ஒரு புதிய பதிவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளது. ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செல்ல முடியுமா? சிகப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மீண்டு வருவதற்கான நேரம்." என்று பதிவிட்டுள்ளது. முன்னதாக, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் நியூசிலாந்தை எதிர்கொண்ட நிலையில், அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post