
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மொத்த பரிசுத் தொகையாக 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ₹49.32 கோடி) வெளியிட்டுள்ளது.
இறுதிப் போட்டி அடுத்த மாதம் லார்ட்ஸில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும். சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு ₹30.82 கோடியும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹18.49 கோடியும் வழங்கப்படும்.
முந்தைய இரண்டு சீசன்களில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறை புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இந்நிலையில், இந்திய அணிக்கு ₹12.33 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.
அட்டவணையில் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகக் குறைந்த பங்காக ₹4.11 கோடி பரிசைப் பெறும்.
விளம்பர வீடியோ
இறுதிப் போட்டிக்கு முன்னதாக வீடியோ வெளியிட்ட ஐசிசி
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் போட்டித்தன்மையை ஐசிசி தலைவர் ஜெய் ஷா பாராட்டினார். இறுதிப் போட்டியாளர்கள் இறுதிக் கட்டங்களில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டனர் என்று குறிப்பிட்டார்.
"இரண்டு விதிவிலக்கான அணிகளுக்கு இடையிலான இந்த இறுதிப் போட்டி, ஆட்டத்தின் மிக நீண்ட வடிவத்தின் கொண்டாட்டமாகும். லார்ட்ஸில் ஒரு சிலிர்ப்பான போட்டியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று அவர் கூறினார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக உற்சாகத்தை ஏற்படுத்த, டெம்பா பவுமா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுடன் மேத்யூ ஹேடன், நாசர் ஹுசைன் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்களும் இடம்பெறும் ஒரு விளம்பர வீடியோவையும் ஐசிசி வெளியிட்டது.
ட்விட்டர் அஞ்சல்
ஐசிசி எக்ஸ் தள பதிவு
A battle of wills, minds and hearts in the Ultimate Test 👊
— ICC (@ICC) May 15, 2025
The #WTC25 Final at Lord's is upon us 🏟 pic.twitter.com/JsNXpmgOXD