ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்; பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, ஹர்திக் பாண்டியா, தற்போது நடைபெற்று வரும், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து, காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பங்களாதேஷுக்கு எதிரான தனது முதல் ஓவரில், வெறும் மூன்று பந்துகளை மட்டுமே வீசிய பின்னர், காயமடைந்த ஹர்திக் பாண்டியா மைதானத்தை விட்டு வெளியேறினார்.
மைதானத்தில் அவருக்கு தரப்பட்ட சிகிச்சையினை தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
card 2
ஞாயிற்றுகிழமை இந்திய அணி, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்ளவிருக்கிறது
காயம் ஆறும் வரை, போட்டியிலிருந்து விலகி இருந்தார் ஹர்திக் பாண்டியா. எனினும், அரையிறுதிக்கு முன்னர், அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லீக் போட்டிகளைத் தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் பலமான அணிகளை இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இழப்பு இந்திய அணிக்கு மிக மோசமான ஒரு பின்னடைவாக வந்தமைந்திருக்கிறது.
ஞாயிற்றுகிழமை, இந்திய அணி, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்ளவிருக்கிறது. தற்போதைய புள்ளி பட்டியலில், இந்த இரு அணிகளிலும் முதல் இரண்டு இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.