Loading...
'ஷுப்மன் கில்லுக்கு அவங்க ரெண்டு பேரும் கிடைச்சது பாக்கியம்!' ரோஹித் - கோலி குறித்து பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி
ரோஹித் - கோலி குறித்து பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி

'ஷுப்மன் கில்லுக்கு அவங்க ரெண்டு பேரும் கிடைச்சது பாக்கியம்!' ரோஹித் - கோலி குறித்து பயிற்சியாளர் கம்பீர் நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 24, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வழிகாட்ட ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி அணியில் இணைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உதவி செய்யக் கிடைத்திருப்பது கில்லுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை

2027 உலகக்கோப்பையை மனதில் கொண்டு கில்லின் சிறப்பான தலைமைப் பண்பு

2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை இலக்காகக் கொண்டு இந்திய அணியை வழிநடத்தி வரும் 26 வயதான ஷுப்மன் கில்லின் கேப்டன்சியைப் பயிற்சியாளர் கம்பீர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

"கில் மிகவும் அமைதியாகவும், சுயநலமின்றியும், அதே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டு அணியை வழிநடத்துகிறார்.

இளம் வயதில் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் நிதானமாக முடிவெடுக்கும் திறன் அவரிடம் உள்ளது. ரன்கள் அடிப்பது மட்டுமின்றி, தனது சிறந்த செயல்பாடுகள் மூலம் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்." என்று கௌதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்கும் அனுபவம் வாய்ந்த இந்திய அணி

இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு மூத்த வீரர்களும் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தத் தொடரில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்படவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 66.2 சராசரியுடன் 331 ரன்கள் குவித்து சிறப்பான சாதனையை வைத்துள்ள ஷுப்மன் கில், மூத்த வீரர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி மீண்டும் வெற்றிகரமான கேப்டனாகத் தன்னை நிரூபிக்கும் முனைப்பில் களமிறங்குகிறார்.

ADVERTISEMENT

போட்டி அட்டவணை

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முழுமையான போட்டி அட்டவணை

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது போட்டி செப்டம்பர் 30 அன்று கவுகாத்தியிலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 3 அன்று சண்டிகரிலும் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் அக்டோபர் 17 வரை நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பெங்களூருவில் நிறைவடைகிறது.

2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் அடித்தளத்தை அமைப்பதில் இந்த ஒருநாள் தொடர் மிக முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT