Loading...
2027 முதல் இந்திய ரசிகர்களுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் முற்றிலும் இலவசம்: ரியல் மாட்ரிட் தலைவர் பெரெஸ் அறிவிப்பு
2027 முதல் இந்தியாவில் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 முதல் இந்திய ரசிகர்களுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் முற்றிலும் இலவசம்: ரியல் மாட்ரிட் தலைவர் பெரெஸ் அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
08:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக, வரும் 2027-ஆம் ஆண்டு சீசன் முதல் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் முக்கிய கிளப் போட்டிகளை எவ்வித சந்தாக் கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாகக் காண முடியும் என ரியல் மாட்ரிட் கிளப் தலைவர் ஃப்ளோரென்டினோ பெரெஸ் அறிவித்துள்ளார். யுஇஎஃப்ஏ மற்றும் ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் ஆகியவை இணைந்து யுசி3 என்ற புதிய கூட்டணியின் கீழ் பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றை உருவாக்க உள்ளன. உலகளவில் இந்தப் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் முதல் சோதனைச் சந்தையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு கிடைக்கும் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் எனவும் ரியல் மாட்ரிட் உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பெரெஸ் தெரிவித்துள்ளார்.

கிளப்புகளுடன் நேரடி தொடர்பு

மும்பை ரசிகரை உதாரணம் காட்டி விளக்கிய பெரெஸ் 

சுமார் 150 கோடி மக்கள் தொகையும் அதிக இளைஞர்களையும் கொண்ட இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட பெரெஸ், சட்டவிரோத இணையதளங்களைத் தவிர்த்து ரசிகர்களுக்குத் தரமான ஒளிபரப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றார்.

இதனை விளக்கிய அவர், "மும்பையைச் சேர்ந்த 15 வயது ரியல் மாட்ரிட் ரசிகர் 2027 முதல் உயர்தரத்தில் போட்டிகளை இலவசமாகப் பார்ப்பார்.

இதன் மூலம் கிளப் அவரை நேரடியாக அறிந்து, பிறந்தநாள் வாழ்த்து, பிரத்யேக வீடியோக்கள் வழங்குவதோடு, மாட்ரிடிஸ்டா திட்டத்தின் கீழ் ஒருநாள் சாண்டியாகோ பெர்னாபியூ மைதானத்திற்கும் அழைக்க முடியும்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

புதிய டிஜிட்டல் புரட்சி

சிறிய மற்றும் பெரிய கிளப்புகளுக்கும் பயனளிக்கும் புதிய டிஜிட்டல் புரட்சி

முந்தைய கிளப் உலகக் கோப்பை ஒளிபரப்பு அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ரியல் மாட்ரிட் போன்ற பெரிய கிளப்புகளுக்கு மட்டுமின்றி ஐரோப்பாவின் சிறிய கால்பந்து கிளப்புகளுக்கும் உலகளாவிய ரசிகர்களை நேரடியாகச் சென்றடையப் பேருதவியாக இருக்கும் எனப் பெரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் கட்டணத் தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்கள் மூலமே சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட போட்டிகளைப் பார்த்து வரும் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்புதிய தளத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT