147 ஆண்டுகளாக டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்-ஹாரி புரூக் ஜோடி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமான பேட்டிங்கைத் தொடர்ந்து, முல்தான் டெஸ்டின் 4வது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய உலக சாதனையைப் படைத்தது.
4வது நாளில் ஹாரி புரூக்-ஜோ ரூட் ஜோடி 454 ரன்கள் குவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1877ல் ஃபார்மேட் தொடங்கிய பிறகு, 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக 450 ரன்களுக்கு குவித்தது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆடம் வோஜஸ் மற்றும் சான் மார்ஷ் ஆகியோர் 449 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
2015ல் ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்கள் இந்த ஸ்கோரைக் குவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஜோடி அந்த சாதனையை முறியடித்துள்ளது.
பார்ட்னர்ஷிப்
ஒட்டுமொத்தமாக பார்ட்னர்ஷிப்பில் நான்காவது அதிக ரன்கள்
ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் பார்ட்னர்ஷிப்பின் 454 ரன்கள், வெளிநாட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில், எந்த விக்கெட்டுக்கும் ஒரு ஜோடிக்கு இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.
இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்புக்கான சாதனையை 2006இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 624 ரன்கள் எடுத்திருந்த மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்ககார வசம் உள்ளது.
இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 1997இல், 576 ரன்கள் எடுத்த இலங்கையின் சனத் ஜெயசூர்யா மற்றும் ஆர் மஹாநாமா ஜோடியும், மூன்றாவது இடத்தில் 1999இல் 467 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ், ஆண்ட்ரூ ஜோன்ஸ் ஜோடியும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் தற்போதைய 454 ரன்கள் ஜோடியான ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் உள்ளனர்.
இரட்டை சதங்கள்
அதிக இரட்டை சதங்கள்
இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் ஆனார்.
தற்போது வாலி ஹாமண்ட் மட்டுமே ஏழு இரட்டை சதங்களுடன் முன்னிலையில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியான அலைஸ்டர் குக் ஐந்து இரட்டை சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆறு இரட்டை சதங்களுடன் உள்ள சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக், கேன் வில்லியம்சன், யூனிஸ் கான், ஜாவேத் மியான்டட் மற்றும் மார்வன் அட்டபட்டு ஆகியோரின் சாதனையையும் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
அதிவேக முச்சதம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்து சாதனை
இந்த போட்டியில் ஹாரி புரூக் 300 ரன்களை கடந்து முச்சதம் அடித்ததன் மூலம், முல்தானில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், 2004இல் இந்தியாவின் வீரேந்திர சேவாக் 364 பந்துகளில் முச்சதம் அடித்த நிலையில், தற்போது 310 பந்துகளில் முச்சதம் அடித்து 20 ஆண்டு கால சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார்.
எனினும், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வீரேந்திர சேவாக் தக்கவைத்துள்ளார்.
அவர் 2008இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் முச்சதம் அடித்திருந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிவேக முச்சதமாக ஹாரி புரூக்கின் சாதனை அமைந்துள்ளது.