'கூட்டத்தையே காணோமே'; ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஷாக் கொடுத்த ரசிகர்கள்
வியாழக்கிழமை (அக்.5) ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே தொடங்கியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், முதல் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் பல இருக்கைகள் வெறிச்சோடி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக அதிக அளவில் டிக்கெட் விற்பனை நடந்த போதிலும், மக்கள் கூட்டம் ஏன் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியல் வியாட் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இதுகுறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.