Page Loader
துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்
துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வளரிவன்

துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2023
01:21 pm

செய்தி முன்னோட்டம்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் 24 ஷாட்கள் முழுவதும் 10.1 க்குக் கீழே ஸ்கோரை விழவிடாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இளவேனில் முதலிடம் பிடித்தார். பிரான்சின் ஓசியான் முல்லர் வெள்ளியும், சீனாவின் ஜாங் ஜியாலே வெண்கலமும் வென்றனர். செப்டம்பர் 12 ஆம் தத்தி தொடங்கிய ரியோ உலக கோப்பையில் 16 பேர் கொண்ட இந்திய அணி களமிறங்கிய நிலையில், பதக்கப்பட்டியலில் ஒரு தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தாலி முதலிடத்திலும், ஜெர்மனி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்