Page Loader
ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்
ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 25, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) வெற்றியாளர் பெங்களூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரட்டை ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் தனது புதிய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 54 வயதான குவாட்ரட், 2016 இல் பெங்களூர் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்தியாவில் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கினார். 2018 இல், பெங்களூர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 2018-19 சீசனில் அவரது தலைமையில் முதல் சூப்பர் லீக் பட்டத்தை கைப்பற்றியது. குவாட்ரட்டின் கீழ், பெங்களூர் கிளப் பல சாதனைகளை படைத்தது. 2018-19 சீசனில், 11 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையை பெற்றது.

ட்விட்டர் அஞ்சல்

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் ட்வீட்