யுஸ்வேந்திர சாஹலுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீண்டும் மீட்டெடுத்த தனஸ்ரீ வர்மா
செய்தி முன்னோட்டம்
விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார்.
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.ஜே. மஹ்வாஷுடன் இருக்கும் புகைப்படங்களும், வீடியோவும் வைரலானதை அடுத்து தனஸ்ரீயின் இந்த நகர்வு வந்துள்ளது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ முன்னதாக யுஸ்வேந்திராவுடனான தனது அனைத்து படங்களையும் நீக்கியதால் விவாகரத்து வதந்திகள் அதிகரித்தன.
இருப்பினும், அவர்களின் டேட்டிங், சுற்றுலாக்கள், பிராண்ட் ஒத்துழைப்புகள், திருமணம் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளின் புகைப்படங்கள் இப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் உள்ளன. இதனால் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வாழ்க்கை
யுஸ்வேந்திராவும் தனஸ்ரீயும் 2024 விவாகரத்து கோரியதாக தெரிவிக்கப்பட்டது
நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற தனஸ்ரீ, யுஸ்வேந்திராவின் கிரிக்கெட் போட்டிகளின் போதே வெளி உலகிற்கு தெரிய வந்த இவர்களின் காதல், 2020இல் திருமணத்தில் முடிந்தது. இ
ருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட்ட நிலையில், திடீரென தனஸ்ரீ அந்த பதிவுகளை நீக்கினார்.
இதுவே இவர்களின் விவாகரத்து குறித்த வதந்திகளை முதலில் தூண்டியது.
தொடர்ந்து, அவர்கள் 2024இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இது சார்ந்து வெளியான பல கூற்றுக்களில், ஒரு குறிப்பிட்ட செய்தியில், தனஸ்ரீ ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அத்தகைய கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர், மேலும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு ரசிகர்களை வலியுறுத்தியுள்ளனர்.