
இனி லியோ தாஸ் இல்ல..தோனி தாஸ்! CSK அணி வெளியிட்ட சூப்பர் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவிருக்கின்றன.
இதற்காக வீரர்கள் அனைவரும் பயிற்சியை துவங்கியுள்ள நிலையில், நேற்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, சென்னை வந்திறங்கினார்.
அவரை வரவேற்கும் விதமாக அந்த அணி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படத்தில் வரும் ஒரு மாஸ் சீனில், விஜய்க்கு பதிலாக தோனியின் புகைப்படத்தை மாற்றி, அந்த வீடியோ ரீகிரியேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக தோனி, ஜாம்நகரில் 3 நாட்கள் நடைபெற்ற அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் தனது மனைவி சாக்ஷியுடன் கலந்துகொண்ட பின்னர், நேரே சென்னை வந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
THA7A FOREVER
“A gift for the fans.” - THA7A FOREVER! 🦁💛#Dencoming #WhistlePodu pic.twitter.com/pg0Rmg54WR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024