எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை
செய்தி முன்னோட்டம்
எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடக தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி பெற்றுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ள சிஎஸ்கே, இதை சாத்தியமாக்கிய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில அடிங்க" எனும் காணொளியை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஐபிஎல் 2023 சீசனில் பட்டம் வென்ற சிஎஸ்கே, அதிக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபில்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் பட்டத்தை 2010 இல் வென்றது. பின்னர் 2011, 2018, 2020, 2021 மற்றும் 2023இல் கைப்பற்றியுள்ளது.
ipl teams followers base in x
ஐபிஎல் அணிகளின் எக்ஸ் ஃபாலோயர்கள் பட்டியல்
எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோயர்களுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் 8.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லாவிட்டாலும், விராட் கோலி போன்ற ஆளுமைகள் நிரம்பியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6.8 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (5.2 மில்லியன்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (3.2 மில்லியன்) முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் (2.9 மில்லியன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (2.7 மில்லியன்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (2.5 மில்லியன்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (7.6 லட்சம்) மற்றும் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் (5.2 லட்சம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.