
தாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று (செப்டம்பர் 25) ஐசிசியிடம் ஒருநாள் உலகக்கோப்பைக்கான விசா பிரச்சினை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
விசா பிரச்சினைகளால் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதோடு, போட்டிக்கான தங்கள் தயாரிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து விசா அனுமதி உத்தரவு இன்னும் வந்து சேராததால் பாகிஸ்தா கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி ஹைதராபாத் வருவதற்கு முன்னதாக பாகிஸ்தான் துபாயில் இரண்டு நாள் குழு பிணைப்பு அமர்வைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்திய விசா குறித்த நிச்சயமற்ற தன்மையால் அது ரத்து செய்யப்பட்டது.
PCB writes to ICC for Visa issue
உலகக்கோப்பைக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்கள்
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, செப்டம்பர் 29 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தொடங்கி ஹைதராபாத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக வீரர்கள், அணி அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்கப்படுவது குறித்த கவலைகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு காட்டப்படும் இதுபோன்ற பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, துபாய் பயணம் நிறுத்தப்பட்டுள்ளதால், சுமார் 35 பேர் கொண்ட பாகிஸ்தான் குழுவினர் நேரடியாக இந்தியா வரும் வகையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.