முதல் பழங்குடியின கிரிக்கெட் வீராங்கனை ஃபெய்த் தாமஸ் காலமானார்
ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் பழங்குடிப் பெண் ஆன்ட்டி ஃபெய்த் தாமஸ் காலமானார். அவருக்கு வயது 90. 1958 இல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்காக முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதன் மூலம் விளையாட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பழங்குடிப் பெண்மணி ஆனார். எனினும் அதன் பிறகு அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கான அவரது சேவைகள் மற்றும் நீண்ட நர்சிங் வாழ்க்கையில் அவர் பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் சமூகங்களுக்கான அர்ப்பணிப்புக்காக தாமஸுக்கு 2019 ஆம் ஆண்டில் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் துக்கம் அனுசரிக்கிறது.