முதலமைச்சர் கோப்பை 2024 போட்டி நிறைவு: சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் சமீபத்தில் சென்னையில் நிறைவு பெற்றது.
இந்த போட்டிகளில் சென்னை மாவட்டம் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் மற்ற பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாட்டின் #முதலமைச்சர்_கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024, பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்றோம்.
— Udhay (@Udhaystalin) October 24, 2024
முதலிடம் பிடித்த சென்னை மாவட்டம், இரண்டாம் இடத்தைப் பெற்ற… pic.twitter.com/oZCwhxVSpf
விவரங்கள்
முதலிடத்தில் சென்னை, இரண்டாமிடத்தில் செங்கல்பட்டு மாவட்டம்
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகைகளில் போட்டிகள் நடைபெற்றன.
மொத்தம் 33 ஆயிரம் பேர், 36 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பதக்கம் வென்ற மாவட்டங்கள்:
சென்னை: 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் (254)
செங்கல்பட்டு: 31 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் (93)
கோயம்புத்தூர்: 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலம் (102)
வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.