ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் வோக்ஸ்
செய்தி முன்னோட்டம்
மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அதற்கு முக்கிய காரணமாக கிறிஸ் வோக்ஸ் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் அமைந்தது.
முன்னதாக, போட்டியின் முதல் நாளில் (ஜூலை 19) நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிருந்த வோக்ஸ், இரண்டாம் நாளில் ஜோஷ் ஹேசில்வுட்டை அவுட்டாக்கி, ஐந்தாவது விக்கெட்டை பெற்றார்.
இதன் மூலம் ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில், தனது முதல் ஐந்து விக்கெட் சாதனையை பதிவு செய்துள்ளார்.
chris woakes test numbers
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் புள்ளிவிபரம்
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013 இல் அறிமுகமான ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் செயல்திறன் போதுமானதாக இல்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, அவரது இடத்தை கேள்விக்குறியாக்கிய நிலையிலும், கடுமையாக போராடி அணிக்கு மீண்டும் வந்தார்.
தற்போது வரை இங்கிலாந்துக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் வோக்ஸ், 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததும் அடங்கும். மேலும், பேட்டிங்கில் 1,717 ரன்கள் குவித்துள்ளார்.
ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்டில் அலெக்ஸ் கேரியை வீழ்த்தியதன் மூலம் உள்நாட்டில் டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 21வது இங்கிலாந்து வீரர் ஆனார்.