Page Loader
INDvsPAK போட்டியை புறக்கணிக்கணும்; ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்; பின்னணி என்ன?
#BoycottIndoPakMatch ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

INDvsPAK போட்டியை புறக்கணிக்கணும்; ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 13, 2023
11:21 am

செய்தி முன்னோட்டம்

நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், எக்ஸ் தளத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக, இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி கடந்த புதன்கிழமை அகமதாபாத் வந்தடைந்தது. அவர்கள் நடன கலைஞர்களின் ஆட்டம் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றனர். எல்லையில், பாகிஸ்தான் ஏற்றுமதி செய்யும் தீவிரவாதத்தை எதிர்த்து இந்திய ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், இது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என கொதிக்கும் நெட்டிசன்கள், இதனால் போட்டியை புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் #BoycottIndoPakMatch