உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் மற்றும் தனஞ்சய டி சில்வா தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனால் இலங்கை அணி 263 ரன்களுக்கு சுருண்டது நல்ல பேட்டிங் பிட்சில் எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். தன்சித் ஹசன் 84 ரன்களும், லிட்டன் தாஸ் 61 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஒன் டவுன் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் அனுபவ ஆட்டக்காரரான முஷாப்குர் ரஹீம் உடன் ஜோடி சேர்ந்து எட்டு ஓவர் மிச்சமிருக்கையில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 64 பந்துகளில் 67 ரன்களும், முஷாப்குர் ரஹீம் 43 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் அடுத்த பயிற்சி போட்டியில் வங்கதேச அணி நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து உடன் மோதுகிறது. அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் ஆட்டத்தில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.