BAN vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது வங்கதேச அணி. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், இந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிடும் நிலையில், பாகிஸ்தானுடன் ஆடி வருகிறது அந்த அணி. இன்றையே போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்கதேச அணியின் சார்பில் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஷரீன் அஃப்ரிடி வீசில் முதல் ஓவரிலேயே தன்ஸித் ஹசன் ஆட்டமிழந்துவிட, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஷாண்டோ ஹோசெயினும் மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
தடுமாறிய வங்கதேச பேட்டர்கள்:
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக வங்கதேச அணியின் பேட்டர்கள் சற்று திணறினர். முதல் பத்து ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கத் தொடங்கியது வங்கதேசம். எனினும், லிட்டர் தாஸ் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர் இழந்து அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், அரைசதத்திற்கு சற்று குறைவாக 45 ரன்களில் ஆட்டமிழந்தார் லிட்டர் தாஸ். அதன் பிறகு இறங்கிய கேப்டன் ஹகிப் அல் ஹசனும் சற்று கைகொடுக்க வங்கதேச அணியின் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சாக உயர்ந்தது. இவர்களைத் தவிர பிற பேட்டர்கள் சோபிக்காததால் 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.