Page Loader
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்காக 4வது பதக்கம் வென்ற விகாஸ்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023இல் வெண்கலம் வென்ற இந்திய வீரர் விகாஸ்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்காக 4வது பதக்கம் வென்ற விகாஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 இன் இரண்டாவது நாளில், கிரேகோ-ரோமன் கிராப்லர் விகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். திங்களன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற ஆண்களுக்கான 72 கிலோ கிரேகோ-ரோமன் பிரிவில் சீனாவின் ஜியான் டானை 8-0 என்ற கணக்கில் 1 நிமிடம் 41 வினாடிகளில் விகாஸ் தோற்கடித்தார். இதற்கிடையே சுமித் (60 கிலோ), ரோஹித் தஹியா (82 கிலோ) மற்றும் நரிந்தர் சீமா (97 கிலோ) ஆகியோரும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் மூவரும் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தனர். முன்னதாக, இந்தியா சார்பில் ரூபின் வெள்ளிப் பதக்கத்தையும், நீரஜ் மற்றும் சுனில் குமார் வெண்கலப் பதக்கங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்