Page Loader
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்ற இந்தியா
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023இல் முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்ற இந்தியா

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்ற இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2023
05:44 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை வழங்கி முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்றுள்ளது. 19 வயதான இளம் வீரர் ரூபின் 55 கிலோ கிரேகோ ரோமன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் 2019 உலக கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீரஜ் மற்றும் சுனில் குமார் முறையே 63 கிலோ ஜிஆர் மற்றும் 87 கிலோ ஜிஆர் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஏப்ரல் 9 முதல் 14 வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா அடுத்தடுத்த நாட்களில் மேலும் பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்