Loading...
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: 46 பதக்கங்களுடன் இந்தியா 12-வது இடம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இந்தியா 12-வது இடம் பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: 46 பதக்கங்களுடன் இந்தியா 12-வது இடம்

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்களின் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடரின் இன்றைய நிலவரப்படி, இந்தியா 4 தங்கம், 21 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 29) தடகளம், குத்துச்சண்டை, டென்னிஸ், வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்த பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

தடகளம்

பதக்கத்திற்கான இறுதிச் சுற்றுகள்

இன்றைய தினத்தின் பிற்பகலில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கணிசமாக உயரும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 2:50 மணிக்கு ஆடவர் போல் வால்ட் தகுதிச் சுற்றில் தேவ் குமார் மீனா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் களம் காண்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 3:35 மணிக்கு மகளிருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் பூஜா மற்றும் சுப்ரியா பங்கேற்கின்றனர்.

மாலை 4:05 மணிக்கு மகளிர் ஹேமர் த்ரோ இறுதிப் போட்டியில் அனுஷ்கா, தான்யாவும், அதே நேரத்தில் தொடங்கும் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பூஜாவும் பதக்கப் போரில் குதிக்கின்றனர்.

ஓட்டப்பந்தயம்

இந்திய ரிலே அணிகள்

மாலை 4:45 மணிக்கு நடைபெறவுள்ள ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அனல் பறக்கும் இறுதிச் சுற்றில் நட்சத்திர தடகள வீரர்கள் அவினாஷ் சாப்ளே மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் இந்தியாவிற்குப் பதக்கம் வென்று தரும் முனைப்பில் களமிறங்குகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 5:15 மணிக்கு கலப்பு 4400 மீட்டர் தொடர் ஓட்டம், மாலை 5:35 மணிக்கு கலப்பு 4100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் மாலை 5:47 மணிக்கு ஆடவர் 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன.

இவற்றில் இந்திய ரிலே அணிகள் தங்கப் பதக்கங்களை நோக்கிச் சீறிப்பாயத் தயாராக உள்ளன.

ADVERTISEMENT

சுற்று ஆட்டங்கள்

குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் வாலிபால்

குத்துச்சண்டை களத்தில் இன்று இந்திய வீரர்களுக்கு பதக்கங்களை உறுதி செய்யும் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

டென்னிஸ் 2-வது சுற்றில் காலை 10:00 மணிக்கு ஒற்றையர் பிரிவில் தக்ஷிணேஸ்வர், மதியம் 12:30 மணிக்கு இரட்டையர் பிரிவில் தக்ஷிணேஸ்வர் - யூகி பாம்ப்ரி இணை, மற்றும் மதியம் 3:30 மணிக்கு கலப்பு இரட்டையர் பிரிவில் அங்கிதா - ஸ்ரீராம் பாலாஜி ஜோடி களம் காண்கின்றன.

வில்வித்தையில் காலை 9:45 மணிக்கு மகளிர் ரிகர்வ் தனிநபர் பிரிவில் கீர்த்தி, கும்கும் போட்டியிடும் வேளையில், வாலிபால் லீக் சுற்றில் மதியம் 12:30 மணிக்கு இந்திய ஆடவர் அணி கத்தாரை எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT