NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி
    41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி

    41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 01, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

    ஆடவர் ஹாக்கி போட்டியின் குழுநிலை ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 11, 17, 33 மற்றும் 34வது நிமிடங்களில் கோல் அடிக்க, வருண் குமார் 41வது மற்றும் 54வது நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார்.

    மேலும், மந்தீப் சிங் 8வது, சுமித் 30வது, சம்ஷர் சிங் 46வது மற்றும் லலித் குமார் உபாத்யாய் 49வது நிமிடங்களில் கோல் அடித்தனர்.

    அதே நேரத்தில், பாகிஸ்தான் சார்பில் முகமது கான் 38வது மற்றும் அப்துல் ரானா 45வது நிமிடங்களில் கோல் அடித்தனர்.

    India hockey team beats pakistan with highest margin

    வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது இந்தியா

    பாகிஸ்தான் கடைசி வரை போராடியும் இந்தியாவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால், இறுதியில் 10-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டியில் இந்தியா 8 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது இதுதான் முதல்முறையாகும்.

    முன்னதாக, 2017இல் பாகிஸ்தானுக்கு எதிராக 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியா பெற்றதே மிகப்பெரிய வெற்றி வித்தியாசமாக இருந்தது.

    இதற்கிடையே, 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது அதன் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.

    இந்நிலையில், தற்போதைய வெற்றி மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்கு இந்தியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ஹாக்கி அணி
    பாகிஸ்தான்
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஹாக்கி போட்டி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    இந்திய ஹாக்கி அணி

    ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி! ஹாக்கி போட்டி
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஆசிய கோப்பை
    எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி ஹாக்கி போட்டி
    ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி ஹாக்கி போட்டி

    பாகிஸ்தான்

    'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி ஹாக்கி போட்டி
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி உலகம்
    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு நாடாளுமன்றம்

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு? சீனா
    Sports Round Up: மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்; இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் மல்யுத்தம்
    சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா இந்தியா
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட்

    ஹாக்கி போட்டி

    உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார் உலக கோப்பை
    நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா! உலக கோப்பை
    ஹாக்கி உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி! இந்திய அணி
    ஹாக்கி உலகக்கோப்பை 2023 : மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி! விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025