
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி திங்கட்கிழமை (ஜூலை 25) அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 3-12 வரை நடைபெறும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தில் உள்ள டாப் ஆறு அணிகள் இடம்பெறும்.
இது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியின் ஏழாவது சீசனாகும். மேலும், இது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று என்பதால், வெற்றி பெறுவதற்கு இந்திய அணி கடுமையாக தயாராகி வருகிறது.
அணித் தேர்வு குறித்து தலைமைப் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் பேசுகையில், "ஹீரோ ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி சென்னை 2023ல் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட ஒரு அணியை நாங்கள் கவனமாக தேர்வு செய்துள்ளோம்." என்றார்.
india squad for asian champions 2023
இந்திய ஹாக்கி அணி வீரர்களின் பட்டியல்
தற்போது ஸ்பெயினில் ஸ்பானிய ஹாக்கி ஃபெடரேஷனின் 100வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி, அங்கு போட்டியை முடித்துக் கொண்டு நேரடியாக சென்னை வர உள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ்.
டிஃபெண்டர்கள்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங், வருண் குமார்.
மிட்பீல்டர்கள்: ஹர்திக் சிங் (துணை கேப்டன்), ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா.
முன்கள வீரர்கள்: ஆகாஷ்தீப் சிங், எஸ் கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், பவன், மந்தீப் சிங்.