ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
இன்று கொழும்பு ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. ரீசர்வ் நாளான இன்று, இந்திய அணி 356/2 என்ற மகத்தான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. அவ்வப்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம், ஒரு கட்டத்தில் சூடு பிடித்தது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இணை சதம் அடித்து சாதனை படைத்தனர். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் 121 ரன்கள் சேர்த்தனர். அதன்பிறகு கோலியும், ராகுலும் சதம் அடித்து, இந்தியாவை 356/2 என்ற நிலைக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வெற்றி
FIFER for Kuldeep Yadav 👏 👏 A resounding 228-run win for #TeamIndia - the biggest win for India in the ODIs against Pakistan (by runs) 🙌 🙌 Scorecard ▶️ https://t.co/kg7Sh2t5pM#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/cl2q5I7j1p— BCCI (@BCCI) September 11, 2023