LOADING...
சச்சின் வீட்டு கல்யாணம்! கோலாகலமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம்; தோனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்பு
அர்ஜுன் டெண்டுல்கர்-சானியா சந்தோக் திருமணம்

சச்சின் வீட்டு கல்யாணம்! கோலாகலமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம்; தோனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
02:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்ட நாள் தோழியான சானியா சந்தோக்கை மார்ச் 5 ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் மணம் முடித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த சில வாரங்களாகவே களைகட்டி வந்த நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

பங்கேற்பாளர்கள்

அணிவகுத்த கிரிக்கெட் மற்றும் சினிமா நட்சத்திரங்கள்

மும்பையில் நடந்த இந்த திருமண விழாவில் கிரிக்கெட், பாலிவுட் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்: முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் வருகை தந்து சிறப்பித்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பங்கேற்றனர். நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் இந்த திருமணத்தில் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்றனர். முன்னதாக ஜாம்நகரில் இவர்களுக்காக ஒரு பிரத்யேக விழாவையும் அம்பானி குடும்பத்தினர் நடத்தியிருந்தனர்.

பின்னணி

யார் இந்த சானியா சந்தோக்?

அர்ஜுன் டெண்டுல்கரின் கரம்பிடித்த சானியா சந்தோக் ஒரு புகழ்பெற்ற தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்கின்-ராபின்ஸ் நிறுவனத்தின் பின்னால் இருக்கும் கிராவிஸ் குரூப் தலைவர் ரவி காயின் பேத்தி ஆவார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற சானியா, தற்போது கால்நடை மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். மும்பையில் மிஸ்டர் பாஸ் என்ற பெயரில் சொகுசு செல்லப்பிராணி ஸ்பா ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

Advertisement