40 ஆண்டுகளுக்கு பிறகு பிபா கூடைப்பந்து உலககோப்பைக்கு தகுதி பெறாத அர்ஜென்டினா
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) தகுதிச் சுற்றில் டொமினிகன் குடியரசிடம் 79-75 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டுக்கான பிபா (FIBA) கூடைப்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை அர்ஜென்டினா இழந்துள்ளது. ரியல் மாட்ரிட் ஃபார்வர்ட் கேப்ரியல் டெக் உள்ளிட்ட ஐரோப்பிய லீக்குகளில் இருந்து நட்சத்திர வீரர்களை அணியில் சேர்த்தும் அர்ஜென்டினா, டொமினிகன்ஸ், கனடா மற்றும் வெனிசுலாவைத் தொடர்ந்து தங்கள் குழுவில் நான்காவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அர்ஜென்டினா, தற்போது தற்போது உலககக்கோப்பை தொடரில் பங்கேற்க கூட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கூடைப்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள்
ஆப்பிரிக்கா : கேப் வெர்டே, ஐவரி கோஸ்ட், அங்கோலா, தெற்கு சூடான், எகிப்து ஆசியா : பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, லெபனான், ஜோர்டான், சீனா அமெரிக்கா : அமெரிக்கா, கனடா, பிரேசில், புவேர்ட்டோ ரிக்கோ, மெக்சிகோ, டொமினிகன் குடியரசு, வெனிசுலா ஐரோப்பா : பின்லாந்து, லிதுவேனியா, ஜெர்மனி, கிரீஸ், ஸ்லோவேனியா, பிரான்ஸ், லிதுவேனியா, ஸ்பெயின், இத்தாலி, ஜார்ஜியா, மாண்டினீக்ரோ இதில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால், உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான பிபா கூடைப்பந்து உலகக்கோப்பை ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 10 வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.