பிபா உலக தரவரிசையில் அர்ஜென்டினா முதலிடத்திற்கு முன்னேற்றம்! இந்தியாவுக்கு 101வது இடம்!
செய்தி முன்னோட்டம்
உலக சாம்பியனான அர்ஜென்டினா கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக பிபா கால்பந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அர்ஜென்டினா பனாமா மற்றும் குராக்கோவுக்கு எதிரான நட்புரீதியான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியது.
இதற்கிடையே யூரோ கால்பந்து தகுதிச் சுற்றில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தை தோற்கடித்த பிரான்சும் புள்ளிப்பட்டியலில் முன்னேறி, பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
இந்திய கால்பந்து அணி இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது.
பிபா உலக தரவரிசையின் அடுத்த அப்டேட் 20 ஜூலை 2023 அன்று வெளியிடப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
பிபா ட்வீட்
🇦🇷🏆 World champions ✅
— FIFA World Cup (@FIFAWorldCup) April 6, 2023
🇦🇷🥇 Top of the #FIFARanking ✅