உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
துருக்கியின் அண்டலியாவில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ்-1 இன் அரையிறுதியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜாஸ் பிரவின் டியோடலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த ஜோடி அரையிறுதியில் 157-155 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவின் ஃபாடின் நூர்பதேஹா மாட் சாலே மற்றும் முகமது ஜுவைடி மசூகி ஜோடியை தோற்கடித்தது. இருவரும் சனிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன தைபேயின் சென் யி ஹ்சுவான் மற்றும் செம் சீ லூன் ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர். இதற்கிடையே இந்திய அணியின் ஜோதி சுரேகா வென்னம், திராஜ் பொம்மதேவரா உள்ளிட்ட பல வீரர்களை தங்கள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.