Page Loader
AFGvsSL : ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி
ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி

AFGvsSL : ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2023
09:04 pm

செய்தி முன்னோட்டம்

திங்கட்கிழமை (அக்.30) நடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதில் சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 10 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபாரூக்கி திமுத் கருணாரத்னவை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்ததோடு, சரித் அசலங்க, மகேஷ் தீக்ஷனா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பைகளில் தனது கிரிக்கெட் கேரியரின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் சர்வதேசப் போட்டிகளில் இது அவரது மூன்றாவது நான்கு விக்கெட்டாகும்.

Fazalhaq Farooqi best performance in ODI World Cup

ஃபசல்ஹாக் ஃபரூக்கியின் உலகக்கோப்பை புள்ளிவிபரங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த 4 விக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையில் அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஃபசல்ஹாக் ஃபரூக்கி, 26 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 28.21 சராசரியுடன் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த எண்ணிக்கையில் மூன்று நான்கு விக்கெட்டுகள் அடங்கும். இந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் உலகக் கோப்பையை பொறுத்தவரை, முகமது நபிக்கு (4/30) அடுத்து சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை ஃபரூக்கி வீழ்த்தியுள்ளார். ஃபரூக்கி 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது அணி இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.