நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் திங்கள்கிழமை (மே 15) அறிவித்தது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இலங்கை சுற்றுப்பயணத்தில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி உள்ள நிலையில், கூடுதலாக முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நூர் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்த நால்வர் அணி ஆப்கானிஸ்தான் அணியின் இந்த நால்வர் அணியின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
ஜூன் 2, 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஹம்பாந்தோட்டாவில் நடைபெறும் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் விளையாடும் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி அணிக்கு கேப்டனாக இருப்பார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை வழிநடத்திய ஆல்ரவுண்டர் குல்பாடின் நைப் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கான் கிரிக்கெட் அணி : ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், அப்துல் ரஹ்மான், ஃபார்க் அப்துல் ரஹ்மான். காத்திருப்பு வீரர்கள் : குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்.