2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று துபாயில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தை முன்னிட்டு, தொடரில் பங்குபெரும் 10 ஐபிஎல் அணிகலும் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளவிருக்கின்றன, எந்தெந்த வீரர்களை விடுவிக்கவிருக்கின்றன என்ற பட்டியலை நாளைக்குள் (நவம்பர் 26) தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பல வீரர்களை, ஐபிஎல் அணிகள் தற்போது விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி எந்தெந்த வீரர்கள் ஐபிஎல் அணிகள் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்த பட்டியல் தான் இது.
ஐபிஎல்
லாக்கி ஃபெர்குசன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
2022ம் ஆண்டு லாக்கி ஃபெர்குசனை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த சீசனில் அவரை டிரேடிங் மூலம் அதே விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஆனால், இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும், கடந்த சீசனில் ஹாம்ஸ்டிரிங் இஞ்சுரி காரணமாக வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடினார் ஃபெர்குசன். எனவே, அவரை கொல்கத்தா அணி விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்ரிச் நோர்க்கியா- டெல்லி கேபிடல்ஸ்:
கடந்த சீசனில் இருந்தே தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வரும் நோர்க்கியா, அதன் காரணமாகவே கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. ரூ.6.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்த அவரை, காயம் காரணமாக டெல்லி விடுவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஐபிஎல்
வனிந்து ஹசரங்கா- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த சீசனில் எட்டு போட்டிகளில் மட்டும் விளையாடி 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய வனிந்து ஹசரங்காவை ஆர்சிபி அணி வெளியேற்றலாம்.
ஹாரி ப்ரூக்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, SRH அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 190 ரன்களை மட்டுமே குவித்த ஹாரி ப்ரூக்குக்கு மாற்றாக SRH வேறு வீரர்களை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம் கரண்- பஞ்சாப் கிங்ஸ்:
கடந்த சீசனில் ரூ.18.5 கோடி என்ற மிக அதிக விலைக்கு ஏலம் போன சாம் கரண், 10 போட்டிகளில் விளையாடி வெறும் 276 ரன்களை மட்டுமே குவித்திருக்கிறார். எனவே, இந்த முறை நிச்சயம் PBKS அவரை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.