Page Loader
ஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்
ஆசிய கோப்பை குறித்து பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்

ஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2023
08:00 am

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியின் ஐந்து சுவாரஸ்யமான உண்மைகளை இதில் பார்க்கலாம். ஒருநாள் வடிவத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஒரு இந்திய பந்துவீச்சாளர் அர்ஷத் அயூப் மட்டுமே ஆவார். 1988இல் அவர் இந்த சாதனையை செய்த நிலையில், அதன் பின்னர் யாரும் செய்யவில்லை. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக எக்ஸ்ட்ராக்களை விட்டுக்கொடுத்த அணி என்ற சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 2000 மற்றும் 2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக தலா 38 எக்ஸ்ட்ராக்களை விட்டுக்கொடுத்தது.

rohit sharma made 50th century of asia cup

ஆசிய கோப்பை வரலாற்றில் 50வது சதத்தை அடித்த ரோஹித் ஷர்மா

ஆசியக் கோப்பை 1984இல் தொடங்கப்பட்டாலும், முதல் டை ஆன போட்டியைக் காண 34 ஆண்டுகள் ஆனது. 2018 சீசனில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதிய பரபரப்பான இந்த போட்டோ டையில் முடிந்தது. டி20 ஆசியக் கோப்பையிலும் இதுவரை எந்தப் போட்டியும் டையில் முடிந்ததில்லை. கடைசியாக 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அல்லாத பந்துவீச்சாளர் சொஹைல் தன்வீர் ஆவார். அதன் பின்னர், ஒருநாள் கிரிக்கெட் வடிவ ஆசியக் கோப்பையில் மொத்தம் ஏழு ஐந்து விக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டாலும், அனைத்தையும் இலங்கை வீரர்களே பதிவு செய்துள்ளனர். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தனது கடைசி சதத்தை 2018இல் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்தார். ஆசிய கோப்பை வரலாற்றில் இது 50வது சதமாகும்.