LOADING...
உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 
தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுடன் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ்.

உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 

எழுதியவர் Srinath r
Oct 18, 2023
09:40 pm

செய்தி முன்னோட்டம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பந்து வீச தீர்மானித்தார். இதன்படி நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு, 288 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி சார்பில் கிளின் பிலிப்ஸ் 71 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அதிரடியாக அணிய சேம்பமேன் 12 பந்துகளில் 25 ரன் குவித்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக் தல 2 விக்கெட் வீழ்த்தினர்.

2nd card

சேசிங்கிள் சொதப்பிய ஆப்கானிஸ்தான் அணி

சற்று மந்தமான பிச்சில் கடினமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. கடந்த போட்டியில் 80 ரன்கள் அடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். பின்னர் வந்தவர்களில் அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில்,ரஹ்மத் ஷா மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் 33.4 ஓவர்களில் 139 உங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் படுதோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு சார்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன் தல 3 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கில் சிறப்பாக அடி 71 ரன்கள் சேர்த்த கிளன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.