NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 16 வயதில் வில்வித்தையில் உலகின் நம்பர் 1 வீராங்கனை; கைகளற்ற ஷீத்தல் தேவியின் அசரவைக்கும் பின்னணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    16 வயதில் வில்வித்தையில் உலகின் நம்பர் 1 வீராங்கனை; கைகளற்ற ஷீத்தல் தேவியின் அசரவைக்கும் பின்னணி
    16 வயதில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆன கைகள் அற்ற இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி

    16 வயதில் வில்வித்தையில் உலகின் நம்பர் 1 வீராங்கனை; கைகளற்ற ஷீத்தல் தேவியின் அசரவைக்கும் பின்னணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2023
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில், இந்தியாவைச் சேர்ந்த 16 வயதே ஆன பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை திறந்த பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனார்.

    230 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்த ஷீத்தல், இரண்டு இடங்கள் முன்னேறி இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அவர் சர்வதேச அளவில் கைகள் இல்லாமல் வில்வித்தையில் போட்டியிடும் முதல் சர்வதேச வீராங்கனை என்ற சிறப்பை கொண்டவர் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.

    சமீபத்தில் சீனாவின் ஹாங்சோவில் நடந்து முடிந்த பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷீத்தல் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட மூன்று பதக்கங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Sheetal Devi background 

    ஷீத்தல் தேவியின் போராட்ட வாழ்க்கை

    உலக வில்வித்தை அமைப்பின் தகவலின்படி, ஷீத்தல் மட்டும் தான் தனது கால்களால் வில்லை ஏவும் ஒரே சர்வதேச வில்வித்தை வீராங்கனை ஆவார்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள லோய்தார் கிராமத்தைச் சேர்ந்த ஷீத்தலுக்கு, பிறக்கும்போதே ஃபோகோமெலியா என்ற நோயுடன் பிறந்தார்.

    இது கைகள் அல்லது கால்கள் வளர்ச்சியடையாத பிறவி குறைபாடு ஆகும். 2021 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டு நிகழ்வின் போது அவரது வில்வித்தை விளையாட்டுத் திறமை கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பயிற்சியாளர்களும் குடும்பத்தினரும் செயற்கைக் கையை அவருக்கு பொறுத்த முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

    How Sheetal improved in sports with disabilities

    மனம் தளராமல் போராடி சாதித்த ஷீத்தல்

    செயற்கை கைகளை பொறுத்த முடியாததால் ஏமாற்றம் அடைந்தாலும், ஷீத்தல் மனம் தளரவில்லை.

    மேலும், மருத்துவ மதிப்பீட்டில், உடலின் மேற்பகுதி வலுவாக இருப்பது கண்டறியப்பட்டது. அது அவருக்கு வில்வித்தை விளையாட்டில் பங்கேற்பதற்கு சாதகமாக அமைந்தது.

    அவர் சிறு வயதில் தனது கால்கள் மற்றும் மேல் உடலைப் பயன்படுத்தி மரங்களில் ஏறியதால், அவரது மேல் உடல் வலுவானதாக மாறியிருக்கலாம் என்று பின்னர் ஒரு பேட்டியில் ஷீத்தல் தேவி கூறியது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து கைகளுக்கு பதிலாக காலின் உதவியுடன் வில்வித்தை போட்டியில் பங்கேற்று விளையாடி சாதித்து வருகிறார்.

    உண்மையில், ஷீடல் 18 வயதுக்குட்பட்டோருக்கான உடல் திறன் கொண்ட போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

    Matt Stutzman helps sheetal to know technique

    உதவிக்கு வந்த பிரபல கைகள் அற்ற வில்வித்தை வீரர் மாட் ஸ்டட்ஸ்மேன்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், செக் குடியரசின் பில்சனில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் கைகளற்ற வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றார்.

    இறுதிப்போட்டியில் துருக்கியின் ஓஸ்னூர் குரேயிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

    இந்த தொடரில் பங்கேற்றபோது, கைகள் இல்லாமல் வில்வித்தை போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மாட் ஸ்டட்ஸ்மேனின் கண்ணில் சிக்கினார்.

    மாட் ஸ்டட்ஸ்மேன் அவர் நுட்பத்தை முழுமையாக்க உதவினார். 2012 இல் லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் மாட் ஸ்டட்ஸ்மேன் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு தடகள வீரர் ஆவார்.

    மாட் ஸ்டட்ஸ்மேனிடம் விளையாட்டு நுட்பத்தை முழுமையாக கற்றுக்கொண்ட ஷீத்தல் தற்போது 16 வயதிலேயே உலகின் நம்பர் 1 வீராங்கனையாகி வரலாறு படைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வில்வித்தை
    இந்தியா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    வில்வித்தை

    வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி இந்தியா
    ஆடவர் வில்வித்தை ரிகர்வ் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீரர் பார்த் சலுன்கே சாதனை இந்தியா
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் உலக சாம்பியன்ஷிப்
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் உலக சாம்பியன்ஷிப்

    இந்தியா

    சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது? தமிழகம்
    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு கேம்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025