2024 இயர் எண்டர்: இந்த வருடம் யூடியூபில் அதிக வ்யூஸ்களை பெற்ற வீடியோக்கள் இவை
இந்த வருடம் முடிய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் பிரபல வீடியோக்கள் தளமான யூடியூப், அதன் தளத்தில் அதிகம் வ்யூஸ்கள் பெற்ற வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. யூடியூப்பின் 2024 ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையையில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளது. அதன்படி, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தான் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக இருந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 7 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்ததுள்ளது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் போன்ற பிற முக்கிய நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றன. ரத்தன் டாடா மற்றும் அனந்த் அம்பானி போன்ற முக்கிய பிரமுகர்கள் தொடர்பான வீடியோக்களும், கல்கி 2898 AD திரைப்படமும் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் கண்டன.
மோயே மோயே: வைரலான மீம் வீடியோ
பிராந்திய மற்றும் கலாச்சார போக்குகளின் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டில் 4.5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்து, "மோயே மோயே" என்ற வார்த்தை. அதனால் அது சார்ந்த வீடியோ மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது என்று அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.
இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட கன்டென்ட் க்ரியேட்டர்ஸ்
கன்டென்ட் க்ரியேட்டர்ஸ்-ஐ பொறுத்த வரை, யூடியூப் இந்தியா, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நபர்களைக் கண்டதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது. Mr Beast, 332 மில்லியன் சந்தாதாரர்களுடன், உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே சமயம் Filmy Suraj (32.5 மில்லியன் சந்தாதாரர்கள்) மற்றும் Sujal Thakral (33.5 மில்லியன் சந்தாதாரர்கள்) போன்ற இந்திய படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க ஈர்ப்பைப் பெற்றனர். கூடுதலாக, யுஆர் கிறிஸ்டியானோ (69.8 மில்லியன் சந்தாதாரர்கள்) மற்றும் ஸ்டோக்ஸ் ட்வின்ஸ் (99.5 மில்லியன் சந்தாதாரர்கள்) போன்ற உலகளாவிய செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்திய பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளனர்.
அதிகம் ட்ரெண்ட் ஆன பாடல்கள்
இசையைப் பொறுத்தவரை, பல பாடல்கள் இந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களாக தனித்து நிற்கின்றன. சாஹிதி சாகந்தி மற்றும் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குர்ச்சி மடத்தபெட்டி, சிவ சவுத்ரியின் ஜலே 2 மற்றும் மதுபந்தி பாக்சி, திவ்யா குமார் மற்றும் சச்சின் ஜிகர் ஆகியோரின் ஆஜ் கி ராத் ஆகியவை சிறந்த பாடல்களில் அடங்கும். மனிஷா ஷர்மா, ராஜ் மாவார் மற்றும் அமன் ஜாஜியின் மாதக் சலுங்கி மற்றும் கேசரி லால் யாதவின், புகாருஜா பைல் 2 போன்ற பாடல்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றதன் மூலம், பிராந்திய மற்றும் நாட்டுப்புற இசையும் இசை நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.