NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி
    புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி

    புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 06, 2023
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் புதிய ஸ்மார்ட் பேண்டை வெளியிட்டிருக்கிறது சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது ஷாவ்மியின் புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்'?

    450 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சம் கொண்ட 1.47 இன்ச் TFT திரையைப் பெற்றிருக்கிறது ஷாவ்மியின் புதிய ஸ்மார்ட் பேண்டு 8.

    100-க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்கள், 50-க்கும் மேற்பட்ட ஃபிட்னஸ் மோடுகளுடன், 24 மணி நேர SpO2 கண்காணிப்பு வசதி, மனஅழுத்தம், தூக்கம் மற்றும் மாதவிடாய் ஆகியவற்றை கண்காணிக்கும் வசதிகளையும் புதிய ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவில் அளித்திருக்கிறது ஷாவ்மி.

    கருப்பு, நீலம், ஐவரி, ஆலிவ் மற்றும் பிங்க் ஆகிய ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது ஷாவ்மியின் இந்தப் புதிய ஸ்மார்ட் பேண்டு.

    ஷாவ்மி

    ஷாவ்மி ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்: பிற வசதிகள் மற்றும் விலை 

    210mAh பேட்டரியுடன் 14 நாட்கள் வரை நீடிக்கும் பயன்பாட்டை அளிக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட் பேண்டு. மேலும், 120 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிறது இதன் பேட்டரி.

    50மீ வரையிலான வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் பேண்டினை, ஆண்ட்ராய்டு 8.0 அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 12.0 மற்றும் அதற்கும் மேற்பட்ட இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

    சீரான கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.1 வசதி கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவை, இந்தியாவில் ரூ.2,574 விலையில் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி.

    இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், ஜெர்மனி மற்றும் சில சர்வதேச சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட் பேண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சியோமி
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சியோமி

    சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம் இந்தியா
    பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன? ஸ்மார்ட்போன்
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  கேட்ஜட்ஸ்

    கேட்ஜட்ஸ்

    ஒன்பிளஸ் நார்டு CE 3 vs ரியல்மீ 11 ப்ரோ, எது பெஸ்ட்? ஸ்மார்ட்போன்
    அக்டோபரில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கும் கூகுள் கூகுள்
    இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஸ்மார்ட்போன்
    இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025