NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது
    நுரையீரல் புற்றுநோய்

    உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 23, 2024
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பயோஎன்டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BNT116 என்ற தடுப்பூசி, மிகவும் பொதுவான புற்றுநோய் வகையான பெரிய செல் லங் கான்சர் (NSCLC) எனும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியுள்ளது.

    ஆகஸ்ட் 20ஆம் தேதி, லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள ராக்ஸ் என்ற நோயாளிக்கு செலுத்தப்பட்டதன் மூலம் இந்த சோதனை தொடங்கப்பட்டது.

    இந்த பரிசோதனை, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஹங்கேரி, பொலந்து, ஸ்பெயின் மற்றும் துருக்கி போன்ற ஏழு நாடுகளில் உள்ள 34 ஆய்வு மையங்களில் துவங்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஆறு மையங்கள் இந்த முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்குபெறுகின்றன. மொத்தம் 130 நோயாளிகள் மீது இந்த தடுப்பூசிக்கான மனித பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

    நுரையீரல் புற்றுநோய்

    நுரையீரல் புற்றுநோயால் 18 லட்சம் மரணங்கள்

    ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 18 லட்சம் மரணங்களை ஏற்படுத்தும் நுரையீரல் புற்றுநோய், புற்றுநோய் மரணங்களுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.

    இங்கிலாந்தில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 48,500 நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இதன் 72 சதவீதம் புகைப்பிடிப்பதனால் ஏற்படும்.

    இந்நிலையில், BNT116 தடுப்பூசி உடலில் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்கவும், பிற்காலத்தில் மீண்டும் வந்துவிடாமல் தடுப்பதற்கும் உதவுகிறது என்று 'தி கார்டியன்' பத்திரிகை அறிக்கையில் கூறியுள்ளது.

    லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த அறிஞர் சியோ மிங் லீ, "நாம் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான இம்மியூனோதெரபி மருத்துவ பரிசோதனைகளில் புதிய பரிமாணத்தை அடைந்து நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையை ஆய்வு செய்யும் சரியான காலகட்டத்துக்கு வருகை தந்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்
    ஐரோப்பா
    மருத்துவ ஆராய்ச்சி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    ஐரோப்பா

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் வாகனங்கள்
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? உலகம்
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் உலகம்

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025