அடுத்த செய்திக் கட்டுரை

உலக கோடீஸ்வரர்கள் ஏழையானால் எப்படி இருக்கும்? வைரலாகும் AI புகைப்படங்கள்
எழுதியவர்
Siranjeevi
Apr 10, 2023
10:56 am
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு AI- தொழில்நுட்பத்துடன் இங்கு பல தலைவர்களின் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அதன்படி, டொனால்ட் டிரம்ப், பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி, மார்க் ஜுக்கர்பெர்க், ஜெப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் போன்ற உருவ படங்களை ஏழ்மையான நபர்கள் பொதுவாக அணியும் உடைகளை அணிந்து, சேரி போன்ற சூழலில் காட்சியளிக்கும் உருவப்படங்கள் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமாக உருவாக்கியுள்ளனர்.
பணக்காரர்கள் வறுமையில் வாடினால் எப்படி இருக்கும் என்பதை தனிநபர்களாக மாற்றுவதற்காக AI திட்டத்தைப் பயன்படுத்தி "மிட்ஜர்னி" மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார் கோகுல் பிள்ளை என்பவர்.