NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்
    தொழில்நுட்பம்

    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 06, 2023 | 04:58 pm 1 நிமிட வாசிப்பு
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா?  கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்
    AI சாட்போட்களால், வேலைக்கு ஆபத்தா?

    தொடர்ந்து தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம், தன்னுடைய மிக பெரிய சாதனையாக நினைப்பது, செயற்கை நுண்ணறிவை. அதன் பரிணாம வளர்ச்சிதான், தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் AI-திறனால் இயங்கும் சாட்போட்கள். ChatGPT, Bing AI மற்றும் Bard போன்ற AI-மூலம் இயங்கும் சாட்போட்கள், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதன் திறமையை கண்டு குதூகலித்த மக்கள், தற்போது அதனால் ஏற்படப்போகும் ஆபத்துகளை எண்ணி கவலையில் உள்ளனர். இந்த சாட்போட்கள், கட்டுரைகளை எழுதவும், கோடிங்களை மதிப்பாய்வு செய்யவும் மற்றும் உங்களின் ஒரு வரி யோசனையை வைத்து, ஒரு கதையையே உருவாக்கவும் முடியும் என்பதால், தற்போது எழுத்தாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் படைப்பாளிகளின் வேலைகளை, AI எடுத்துக்கொள்ளும் என்ற அச்சம் பரவி வருகிறது.

    பதில் தரும் கூகிள் CEO சுந்தர் பிச்சை

    இது குறித்து, ஒரு தனியார் நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சையிடம் கேள்வி கேட்கப்பட்டது. கூகுளில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள், தங்கள் வேலையைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, நேரடியாக பதில் கூறாமல், "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும், ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார். "இந்த தொழிநுட்பத்திற்கு நிறைய சமூக மாறுதல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றும் சுந்தர் பிச்சை கூறினார். இதோடு, மென்பொருள் பொறியாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வேலையின் ஒரு பகுதியாக, இதுநாள் வரை செய்து வந்த சில போரான வேலைகளை, AI மூலமாக சிறப்பாக செய்ய இயலும் எனவும் வேடிக்கையாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    செயற்கை நுண்ணறிவு
    கூகுள்

    செயற்கை நுண்ணறிவு

    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? சாட்ஜிபிடி
    AI புகைப்படம்: ராம்ப் வாக்கில் ஸ்டைலாக வலம் வரும் மார்க் ஜுக்கர்பெர்க்! மெட்டா
    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா

    கூகுள்

    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! இந்தியா
    கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது? செயற்கை நுண்ணறிவு
    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    மகப்பேறு விடுப்பு: ஊதியம் தர மறுக்கும் கூகுள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு ஆட்குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023