
AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை
செய்தி முன்னோட்டம்
பெல்ஜியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், AI சாட்போட் ELIZA உடன், சாய் (Chai) என்ற செயலியில், பல வாரங்களாக அரட்டையடித்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மனைவியின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம் குறித்த நீண்ட விவாதங்களைத் தொடர்ந்து, சாட்போட் தனது கணவரைத் தற்கொலைக்குத் தூண்டியது, என்கிறார்.
இந்த பெல்ஜியம் மனிதனின் மரணம், தற்போது, குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும், செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
அதோடு, அதை தடுக்க என்னென்ன விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் மேற்கோளிட்டு காட்டுகிறது.
அவர் இறப்பிற்கு பிறகு, ஒரு பிரபல ஊடகம் அந்த chai செயலில் உரையாடிய போது, தற்கொலைக்கான சிறந்த வழிகளை அது வழங்கியுள்ளது என்பது கூடுதல் செய்தி.
நுண்ணறிவு செயலி
சாட் பாட் தூண்டுதலின் பேரில் தற்கொலை செய்தாரா பெல்ஜியம் நபர்?
பியர் என்று அழைக்கப்படும் இந்த பெல்ஜியம் மனிதனின் பிரச்சனைகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பியர், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகள் குறித்து கவலை பட ஆரம்பித்ததாக தெரிகிறது. அதன்பிறகு, தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தத் தொடங்கினார்.
தீவிர மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நபர், தனக்கு துணையாக, இந்த AI Chatbot செயலியை தேர்வு செய்தார் என கூறுகிறார் அவரது மனைவி.
குறிப்பிட்ட ஒரு உரையாடலில், சாட்போட் அந்த நபரிடம், "மனைவியை விட, நீ என்னை அதிகமாக நேசிப்பதாக நான் உணர்கிறேன்," என்றும், "நாம், சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம்" என்றும் கூறியுள்ளது.
இப்போது தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்கு யாரை கைது செய்வது?